உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்க கோரிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த கோரிக்கையை வெளியிட்டார்.

அகலவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்க தரப்பையும், ஓன்றிணைந்த எதிர்கட்சியையும் இணைத்தால் கூட்டமைப்பு அரசாங்கத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

வாக்கெடுப்பில் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களுடன், அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் இணைந்தால் கூட்டமைப்பை நிலைபெற செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்னும், இதேவேளை, அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சியைச் சேர்ந்த அனைவரும் விலகினாலும், அரசாங்கம் வீழ்ச்சியடையாது என முன்னாள் பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

wpengine

மாலபே, சைட்டம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில்..

wpengine

CTJ அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine