உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 454 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது – சீ.பி.ரத்நாயக்க..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை தற்போ​தைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று(04) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் படையொன்று நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு பாரிய எதிர்ப்பு உள்ளதாகவும் சீ.பி. ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

அடுத்த வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடாத்தப்படலாம் – பைசர் முஸ்தபா ஆரூடம்

wpengine

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

wpengine

தரமற்ற பௌத்த கொடிகளை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine