உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு விஜேராமவில் உத்தியோகபூர்வ இல்லம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொதுநிர்வாக அமைச்சிற்கு சொந்தமான கட்டடம் ஒன்றே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

விஜேராம மாவத்தை பீ 106 என்ற முகவரியைக் கொண்ட இல்லம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி முதல் இந்த இல்லம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றில் நேற்று அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்க வேண்டிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

அரசின் அடக்குமுறைக்கு அச்சமடைய வேண்டாம் – பொன்சேகா..!

wpengine

அயோத்தி – பாபர் மசூதி ஹிந்துக்களுக்கே சொந்தம்

wpengine