உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் பரிசோதகருக்கு திடீர் இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணைகளை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஜயசேன கமகே என்பவர் ஒருங்கிணைத்து, முக்கிய ஆதாரங்களை திரட்டியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகரை அவரது முன்னைய பணியிடமான கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு மீண்டும் இடமாற்றம் செய்து பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இது பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. அத்துடன் ஆணைக்குழு உறுப்பினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதே நேரம் குறித்த பொலிஸ் பரிசோதகருக்கு அவ்வாறு கண்டிப்பாக இடமாற்றம் வழங்கப்பட வேண்டுமாயின் அவரது முன்னைய பணியிடத்துக்குப் பதிலாக கொழும்புக்கு அண்மித்த பிரதேசமொன்றுக்கு இடமாறுதல் வழங்குமாறும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு

wpengine

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நீதியரசர் இருவருக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine

பண்டிகை காலத்தினை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் 2000 பேர் களத்தில்…

wpengine