உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் மே தினக்கொண்டாட்டத்திற்கு வருகை தந்த பஸ் பல்கலைக்கழக மாணவனின் உயிரை குறிவைத்தது



கிருலப்பனையில் இடம்பெற்ற மே தின கூட்டத்திற்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவணியினர் வந்த பஸ்வண்டி சில்லில் அகப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலியான மாணவன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தப்பிச் சென்ற குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

25 வகையான மருந்துக்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு…

wpengine

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

wpengine

பிரசாந்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine