உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு…


ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனுவினை தம்பர அமில தேரர் இன்று(28) தாக்கல் செய்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது எனவும், இதன் காரணமாக ஜனாதிபதியின் குறித்த இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

தென்னாபிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக் குழாம்…

wpengine

ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை

wpengine

20ம் சீர்திருத்தத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு..

wpengine