உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலும் பாதுகாப்பு பிரதான அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை இராணுவத்தின் மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இன்று(28) கட்டளையிட்டார்.

இந்த ஐந்து வழக்குகளிலிருந்தும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் இந்த வழக்கு, ஜனவரி மாம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம் இல்லை – சாரதிகள் குற்றச்சாட்டு

News Editor

இலங்கைக்கு எதிரான நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுக்கு வெற்றி

wpengine

முருங்கன் மாவிலங்கேணி அடைக்கல மாதா தேவாலயத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதி ஒதுக்கீடு!!!

wpengine