உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள



கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய முறைபாடுகள் 725 தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.

நேற்று புதன்கிழமை(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

wpengine

இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு…

wpengine