உள்நாட்டு செய்திகள்

மஹிந்தர் முந்திவிட்டார் – பீலிக்ஸ்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரப்பட்டு விட்டதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

எங்களது முன்னாள் ஜனாதிபதி அவசரப்பட்டு விட்டார். ஜோதிடர்கள் தொடர்பில் கூடுதல் நம்பிக்கை வைத்து விட்டார்.

யாராலும் மஹிந்தவை தோற்கடிக்க முடியாது எனக் கருதினார்கள்.

நாட்டை மீட்டெடுத்த தலைவர் மஹிந்த என்பதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த கௌரவத்தை இல்லை என சொல்லவில்லை என அண்மையில் கூறியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பிலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பொறுமையாக இருந்தார்.

ரணில் விக்ரமசிங்க நிகர் பொறுமை என்ற ரீதியில் பொறுமையாக இருந்தார். எங்களில் சிலருக்கு பொறுமையில்லை. எவ்வாறெனினும் அரசியல் தீர்மானங்கள் சரியான முறையில் எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என பீலிக்ஸ் பெரேரா ராகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

Related posts

1000 ரூபாய், சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக பல்கலைக்கழகங்களும் போராட்டத்தில்…

wpengine

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

சைட்டம் தனியார் கல்லூரியின் பெற்றோர்கள் சங்கம் காவற்துறையிடம் முறைப்பாடு…

wpengine