உள்நாட்டு செய்திகள்

மஹிந்தரின் அரசியல் நாடகத்தின் இறுதி அரங்கம் குருநாகலில் – அகில



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்டத் தலைவர் நான். மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

எனது வாழ்நாளில் நான் ஒருபோதும் மஹிந்தவுடன் பொதுத் தேர்தலில் போட்டியிட நேரிடும் என சொச்சமேனும் கருதவில்லை. வீழ்ச்சி ஏற்பட்டு விட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது.
வளர்ச்சி ஏற்பட்டாலும் அப்படித்தான். மஹிந்தவின் காலம் முடிவடைந்துவிட்டது.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினாலும் மஹிந்த இங்கு இருப்பாரா? நாம் தானே இந்த மாவட்டத்தில் இருக்கப் போகின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் குருணாகலில் அரங்கேற்றப்பட உள்ளது.

மிகவும் கஷ்டப்பட்டு குருணாகலில் அவர் இந்த நாடகத்தை நடிக்கவுள்ளார் என அகிலா விராஜ் காரியவசம் மஹாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

(riz)

Related posts

ஸ்ரீ.மு.காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் குறித்து ஹக்கீமிடம் கட்சியினர் கேள்வி..

wpengine

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen