உலக செய்திகள்

மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 31 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் மீட்பு படையினர் சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி மழைசார்ந்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி தெரிவித்துள்ள்ளார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு – 48 மாணவர்கள் உயிரிழப்பு…

wpengine

உலக அளவில் அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடாக இந்தியா

wpengine

நெதர்லாந்து நாட்டு சிறைகள் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு..

wpengine