உள்நாட்டு செய்திகள்

மழை காரணமாக டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்…


மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் 5 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இதன்போது 48 ஆயிரத்து 791 இடங்கள் காண்காணிக்கப்பட்டுள்ளன.

இதன்போது டெங்கு நுளம்புகள் பரவுவக்கூடிய 11 ஆயிரத்து 148 இடங்களும், நுளம்பு குடமிகளுடன் கூடிய 1444 இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு, பொது மக்களிடம் கோரியுள்ளது.

Related posts

அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு கட்டாயமாக்கப்படவுள்ளது..

wpengine

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!

wpengine

இ.போ.ச பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine