உள்நாட்டு செய்திகள்

மழையுடான காலநிலை தொடரும்…


தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் தென்மேற்கு பகுதியில் மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

விஜயகலா பதவி நீக்கம் குறித்து பரவும் செய்திகளில் உண்மையில்லை…

wpengine

புதிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதி செய்யப்படவில்லை

wpengine

பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டாக்டர் ஆரிப் ஆல்வி…

wpengine