உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்கு கிடைக்கவில்லை..- அரச அச்சகம்

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்

wpengine

தங்க நகைகளை அணிந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

wpengine