உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ரிசாத் பதியுதீனின் பாதுகாப்புக்காக இறக்காமம் சபையில் பிரேரணை நிறைவேற்றம்

wpengine

ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்…

wpengine

இலங்கையை ஆட்டிப்படைக்கும் பெண்ணால் அவுட்டான சவேந்திர சில்வா

wpengine