உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்…



நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை நாளை முதல் மேலும் வலுவடையக்கூடும் என தெரிவத்துள்ளது.

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அம்பாறை , பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும் .

கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

HMPV வைரஸ் ஆபத்தானதா?

Azeem Kilabdeen

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம் – உடனடியாக விசாரித்து உண்மை நிலையைக் கண்டறியுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் கோரிக்கை!!!

wpengine

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen