உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடும்…



நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றிலிருந்து குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திலும் அதிகமாக காற்று வீசக்கூடும் எனவும் மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிகூட்டம் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலம் நீடிப்பு..

wpengine

கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

wpengine

A/L வினாத்தாள்கள் திருத்தும் முதல் கட்டப் பணிகளுக்காக 37 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது…

wpengine