உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்…


நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கும் இந்த காலநிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களில் (இன்று முதல் ஜூலை 17 வரை) சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என்றும திணைக்களம் அறிவித்துள்ளது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது..

Related posts

ஊரடங்கு மேலும் நீடிப்பு

wpengine

பல பகுதிகளில் இன்றும் மழை

wpengine

அரச ஊழியர்களுக்கு திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு

News Editor