உள்நாட்டு செய்திகள்

மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகள் அகற்றப்பட மாட்டாது..



புறக்கோட்டை, மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இக்கடைத் தொகுதிகள், நேற்று(28) அங்கிருந்து மா நகர சபை ஆணையாளரின் பணிப்புரையின் பேரில் அகற்றப்படவிருந்தது.

இக்கடைத் தொகுதிகள் யாவும், மீளவும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாகவும், உடனடியாக அங்கிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறும் கூறி, குறித்த வியாபாரிகளை அங்கு வந்திருந்த அதிகாரிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டுவரப்பட்ட நிலையில், அமைச்சர் அவ்விடத்துக்கு விரைந்து சென்று, அகற்றப்படவிருந்த அந்நடை பாதைக் கடைத் தொகுதிகளை அவரது முயற்சியால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

####

Related posts

சேயா பாலியல் படுகொலை வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு

wpengine

வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

wpengine

ஐ.தே.கட்சிக்கு தேர்தல் வன்முறை சம்பவங்களில் அதிகளவு பாதிப்பு – பெபரல் அமைப்பு

wpengine