கேளிக்கை

மலையாளத்தில் களமிறங்கும் விக்ரம்…



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் விக்ரம் அடுத்ததாக மலையாள படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `ஸ்கெட்ச்’ படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்’ படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

அவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ’.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினு ஜோசப் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி, பிஜு மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது…

wpengine

டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா…

wpengine

ஒரேநாளில் 590,191 ரசிகர்களை கவர்ந்த ‘துப்பறிவாளன்’.. (Video)

wpengine