கேளிக்கை

மற்றுமொரு நடிகருக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ்.

தற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜுக்கும், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related posts

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு வழங்கிய உணவில் ஆணுறுப்பு.. (PHOTO)

wpengine

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு…

wpengine

Lipstick பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிஞ்சை…

wpengine