ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மர்மப் பொருள் வெடித்து கணவன்-மனைவி வைத்தியசாலையில்



மர்மப்பொருள் வெடித்ததில் கணவன், மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 30) வர்ணன் பேபிவாணி (வயது 26) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கணவன், மனைவி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை தமது வீட்டு காணியினை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போதே மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது.

இதில் இருவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

பல்பெந்தியாவ விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு

wpengine

இளைஞனும், சிறுமியும் அம்மாவிடம் மாட்டிய சுவாரசியம்.

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமும், வரப்பிரசாதங்களும்

wpengine