உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு !



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது.

இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனரக வாகனங்களுக்கு சிறுநீர் பரிசோதனை தவிர புதிய மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது

Related posts

மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு

News Editor

உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் நியூஸிலாந்து பிரதரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு…

wpengine

ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிப்போம் – முஜிபுர் ரஹ்மான்

wpengine