உள்நாட்டு செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை



மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத்திடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து டொக்டர் நலிந்த ஹேரத்திடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரச மருத்துவர்கள் சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட புத்தகமொன்றில் காணப்பட்ட விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகர பிணையில் விடுதலை (Update)

wpengine

அபாயா விவகாரம்: கல்லூரி அதிபர் பிணையில் விடுதலை!

wpengine

ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய 261 இலங்கையர்கள்

wpengine