உள்நாட்டு செய்திகள்

மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட 325  ரயிலின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய ரயில் நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

மேல்மாகாணத்தில் 1,156 பேர் கைது

wpengine

மத்தியவங்கி பிணை முறியுடன் பிரதமருக்கு நேரடித் தொடர்பு – ஜே.வி.பி பகிரங்க குற்றச்சாட்டு..

wpengine

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine