ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையை எதிர்க்கிறார் மஹிந்தர்



மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை விடுத்து சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தோற்கடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.

பாதுக்க என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,சமூக விழுமியங்கள் இன்று இழக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர்,தண்டனைகளை அதிகரிப்பதால் குற்றங்களை குறைக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் பாரிய குற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன என்பதையும் அவர் கோடிட்டு காட்டினார்.

இதேவேளை மரண தண்டனை அமுல் செய்யப்பட வேண்டும் என்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வித்தியா பாலியல் படுகொலையும் சூத்திரதாரிகளின் சிறை நீடிப்பும்

wpengine

இதுவரை 213 பேர் குணமடைந்துள்ளனர்

wpengine

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

wpengine