உள்நாட்டு செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு



மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 கைதிகளுக்கு இவ்வாறு தண்டனைக் குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி பொது மன்னிப்பு அளித்து ஜனாதிபதி கையொப்பமிட்ட ஆவணம் கடந்த 16ம் திகதி நீதி அமைச்சினால், சிறைச்சாலை தலைமையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு அடிப்படையில் தண்டனை குறைப்பு வழங்குவது தொடர்பில் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த 34 கைதிகளுக்கும் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளின் பின்னரே இவ்வாறு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

wpengine

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

wpengine

போதியளவு விளக்கம் இல்லாது வழக்குகளை விமர்சிக்க வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க…

wpengine