வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 380 ரூபாவாக காணப்படுவதுடன், கறிமிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்

wpengine

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

wpengine

செலிங்கோ காப்புறுதி ஊடாக இலங்கை ஆடை நிறுவக பணியாளர்களுக்கு காப்புறுதிகள்

wpengine