உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் பதற்றம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் என மக்கள் கூடியமையால் அங்கு பதற்றமான சூழல் நிழவி உள்ளது.

இன்று மாலை (12-05-2022) ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது.

இந்த நிலையில் காலை முழுவதும் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் மாலை நேரம் எரிபொருள் பெற முயன்ற போது, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகள் நிலை ஏற்பட்டது.

சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிகவிலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டனர்.

இந்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் அனைவரும் கலந்து சென்றுள்ளனர்.

 

 

Related posts

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

wpengine

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஒத்திவைப்பு…

wpengine

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பேரரசர் இடையில் சந்திப்பு..

wpengine