Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பள்ளிமடு, உலியன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.

சடலங்கள் சம்பவ இடத்திலயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்கேநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை  அடம்பன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Update 1.00

மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மன்னார் – அடம்பன் –  முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

நேகம கிளையின் 7வது இரத்ததான முகாம்

wpengine

பொறுப்பை ஏற்று பதவி விலகுங்கள்- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

wpengine

ஜீ – 7 மாநாட்டில் ஒபாமாவினை சந்திக்க ஜனாதிபதி ஆயத்தம்..

wpengine