உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மன்னாரில் கரை ஒதுங்கிய சடலம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் இன்று (02) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கரை ஒதுங்கிய சடலத்தில் நீல நிற சாரம் அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டி – ஷர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.

இதுவரை சடலம் மீட்கப்படவில்லை.

இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

Related posts

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

Azeem Kilabdeen

முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தினம் குறிப்பு..

wpengine

மேலும் 2,644 பேர் பூரண குணம்

wpengine