ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனைவி கொலை: கணவன் கைது



அம்பாறை மாவட்டம், திருக்கோவில், முனைக்காடு பகுதியில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர்,  (15) கைது செய்யப்பட்டுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு காரணமாக ஏற்பட்ட குடும்பத்தகராறில், மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியின் தலையில் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஸ்தலத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ஒரு பிள்ளையின் தாயான 40 வயதுடைய இளையதம்பி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அதி­பரும் பௌத்த தேரர் ஒரு­வரும் கைது

wpengine

530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!

wpengine

‘அருவருக்கத்தக்க அமெரிக்கர்’ ஜனாதிபதிக் களத்தில் – (PHOTO)

wpengine