உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..



பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் மனு விசாரணைகளது தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(11) காலை நீதிபதி குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற தீர்ப்பானது எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பேரூந்து கட்டணம் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று…

wpengine

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் கொடுத்து எச்சரிக்கை..

wpengine

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்த அமைச்சரவை அனுமதி..

wpengine