உள்நாட்டு செய்திகள்

மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இராஜதந்திரிகளுக்கு இலங்கை விளக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில், உலக நாடுகளின் ராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிப்பை வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு ஒன்று கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளது.

இதன்போது மனித உரிமைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் தொடர்பாக இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் பரவலுக்குப் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் அரசியல் யாப்புடன் அமைந்த சட்ட நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் போன்றவை குறித்த தெளிவுப்படுத்தல்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டம் குறித்த விரிவான மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையின் புதிய வரைபடமானது 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும்..

wpengine

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி

wpengine

பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

wpengine