உள்நாட்டு செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முறைப்பாடு.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(05) மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

கடந்த 31ஆம் திகதி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே குறித்த இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை கையளித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர, இதன் ஊடாக நல்ல தீர்வை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

மாலபே SAITM தனியார் கல்லூரியை மூடுமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எனினும் இந்த போராட்டங்கள் துரோகத்தனமானது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்திருந்தார்.

இலவச கல்வியை கேள்விக்குரியாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்த கோருவது துரோகத்தனமா? அல்லது அதனை பாதுகாப்பது துரோகத்தனமா? என்று அமைச்சரிடம் தாங்கள் கேள்வி எழுப்புவதாகவும் லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாளை அரச பொது விடுமுறை..

wpengine

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

மிஹின் லங்கா வழக்கில் முன்னாள் பா.உ சஜினுக்கு பிணை..

wpengine