உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி பிணை முறிகள் குறித்த விசாரணை – ஆணைக்குழுவின் அமர்வு இடைநிறுத்தம்…



மத்திய வங்கி பிணை முறிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள மத்தியவங்கி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

————————————— update

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று(22) சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.

பெர்ப்பச்சுவல் டெரசரிஸ் நிறுவன சட்டத்தரணிகள் பங்கேற்க அனுமதி கோரியதையடுத்தே விசாரணைகள் இன்று முற்பகல் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெர்ப்பச்சுவல் டெரசரிஸ் நிறுவன சட்டத்தரணிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆணைக்குழு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆணைக்குழு விசாரணைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

wpengine

யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22 ம் திகதி ஆரம்பம்…

wpengine

அக்குரஸ்ஸவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் பலி

wpengine