உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் குறித்து மற்றுமோர் முறைப்பாடு…


மத்திய வங்கி பிணைமுறி விநியோக சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஊழல் எதிர்ப்பு முன்னணி இன்று(21) இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் காரியாலயத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது.

குறித்த இந்த முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர், இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் இந்த ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, முறி விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு

wpengine

அஹமட் ஷஹீட் இன்று இலங்கை விஜயம்

wpengine

ரணிலுக்கு எதிராக ஜப்பானில் போராட்டம்..!

wpengine