உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கியின் ஆளுனராக மீளவும் அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க திட்டமில்லை – ராஜித



மத்திய வங்கியின் ஆளுனராக மீளவும் அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க திட்டமில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(08)நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர், பதவிக் காலம் பூர்த்தியாகும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை மீள நியமிக்க ஆயத்தங்கள் எதுவுமில்லை.

அர்ஜூன் மகேந்திரன் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் சில காலங்களில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

wpengine

இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு விலைகள் இல்லை

wpengine

டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine