உள்நாட்டு செய்திகள்

மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி…



மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஜப்பானின் தய்ஷே நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொத்துஹர தொடக்கம் ரம்புக்கன ஊடாக கலகெதர வரையான 32.5 கிலோமீற்றர் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த திட்டத்திற்காக 100 பில்லியன் ஜப்பான் யென்னை வழங்குவதற்கு ஜப்பானின் மிட்சுபிஷி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine

தனிமைப்படுத்தல் விதிகளை கடுமையாக்க நடவடிக்கை

wpengine

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம்

wpengine