உள்நாட்டு செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒப்பந்தத்தை ஜப்பானிய நிறுவனம் இரத்து செய்தது..


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜப்பானிய நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீள பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்காக மற்றுமொரு நிறுவனத்தை அரசாங்கம் தேடிவருவருகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையானது மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான முதல் கட்டத்தை சீனா நிறுவனம் ஒன்று நிர்மாணித்து வருகின்ற நிலையில், இரண்டாவது கட்டமான குருநாகலில் இருந்து பொதுஹெர வரையிலான நிர்மாணப் பணிகளை உள்நாட்டு நிறுவனமொன்று பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் மீதமுள்ள பொதுஹெரவிலிருந்து கண்டி வரையிலான  நிர்மாணப் பணிகளுக்காக ஜப்பானிய நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீள பெற்றுக் கொண்டதால், புதிய நிறுவனமொன்றை அரசாங்கம் தேடி வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி – காவலர் கைது.

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine