உள்நாட்டு செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று கிரியுல்ல பிரதேசத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் நடைபெற்றது.

மீரிகம தொடக்கம் குருணாகல் வரையிலான 39 கிலோ மீற்றர் நீளமான பகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை 2019ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்ய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்காக 15 ஆயிரம்கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிகள் கடவத்தை முதல் மீரிகம வரையிலும், இரண்டாம் கட்டம் குருணாகல் முதல் தம்புள்ளைவரையிலும் மேற்கொள்ளப்படும்.

2020 ஆம் ஆண்டளவில் நான்கு கட்டங்களாக இந்த நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் புகைப்படங்கள்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

wpengine

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினை தோற்கடித்து இலங்கை 215 ஓட்டங்களால் வெற்றி…

wpengine