உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையம் தனியார் வசம்



மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமானத்தளம் இந்த வருட இறுதிக்குள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை உள்ளூர் சிவில் விமானசேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்காக பல நிறுவனங்களிடம் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் விமான நிலையத்தை அமைத்த சீனாவில் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தை அமைத்தபோது பெறப்பட்ட கடன்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டே ஈடுசெய்யப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையம் 209 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2013மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

இதில் சீன அரசாங்கம் 190 மில்லியன் டொலர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதியோருக்கான கொடுப்பனவு இன்று

Azeem Kilabdeen

மீண்டும் ஒரு நாள் சேவை

wpengine

உமா ஓய வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி…

wpengine