உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது குறித்த கலந்துரையாடல் இன்று..



மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் வகையிலான பேச்சுவாரத்தைகள் இன்று(18) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இடையில் குறித்த இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

மத்தள விமானநிலையத்தை குத்தகைக்கு விடப்படும் போது அதில் 49.5% பங்கு உரிமையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான யோசனை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு அதிகமான பங்கு உரிமத்தை இந்திய நிறுவனம் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இதனை சீர் செய்யும் வகையில் பேச்சுவார்த்தைகள் ஆரப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்

wpengine

சம்பள உயர்வு இல்லாத நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு வருகிறது.

wpengine

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி இறையெய்தினார்

wpengine