உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு



மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணியொருவரிடமிருந்து 65 மில்லியன் ரூபா பணத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரிடமிருந்தே இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

FZ 551 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் இன்று முற்பகல் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெலிங் பவுண், ரியால் மற்றும் டினார் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் பணம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

2018 ஜனவரி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்..

wpengine

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

wpengine

நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்

Azeem Kilabdeen