உள்நாட்டு செய்திகள்

மத்தளயில் விமானம் ஒன்றில் தீ விபத்து…


மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த CVK 7042 என்ற விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் விமான நிலையத் தீயணைப்பு படையினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திலிருந்து மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், இன்று காலை ஓமான் நோக்கி புறப்பட்ட தயாரான போதே விமானத்தில் தீப்பரவியுள்ளது.

இதன்போது குறித்த விமானத்தில் 7 அலுவலக பணியாளர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை…

wpengine

சுகாதார விதிகள் அடங்கிய கோவை இன்று

wpengine

‘பிஸ்கட்டுக்கு என்ன செய்தோமோ அதையே செய்வோம்’ – கோழி இறைச்சி விலை தொடர்பில் எச்சரிக்கை!

wpengine