Top Story 2உள்நாட்டு செய்திகள்

மதுபான விலைகளில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய வரவு செலவுத் திட்ட முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை 126 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும், பியர் (330மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

wpengine

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

wpengine

மேலும் 705 பேர் கைது

wpengine