உள்நாட்டு செய்திகள்

மதுபானத்தை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்…



(FASTNEWS|COLOMBO) பௌர்ணமி தினத்தில் மதுபானத்தை விற்பனை செய்த நவகமு பகுதியில் உள்ள கலால்வரி உரிமம் பெற்றிருந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கலால்வரி திணைக்களத்தின் அதிகாரிகளால் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த பணியாளர் ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்தின் முன்பக்கத்தை மூடி, பின்பகுதி வழியாக இவ்வாறு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காலி வீதியில் போக்குவரத்து தடை

wpengine

சாவகச்சேரி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி…

wpengine

எதிர்க்கட்சி தலைவர் பதவியை அரசியல் யாப்பின் படி மாற்ற முடியாது…

wpengine