Top Story 3விசேட செய்தி

மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு: பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முன்னதாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 

பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஹப்புத்தளை, பசறை மற்றும் பண்டாரவளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல, கண்டி மாவட்டத்தின் உடபலாத, உடுநுவர, பாதஹேவாஹெட்ட, பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் புலத்கொஹுபிட்டிய, குருநாகல் மாவட்டத்தின் மல்லவப்பிட்டிய, மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட, மேற்கு கொத்மலை, கிழக்கு கொத்மலை, ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, நிவித்திகல, எஹெலியகொட மற்றும் கொலொன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தின் நியகம, கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோவூட், அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (22) காலை 09.30 மணி முதல் நாளை காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கிராம அலுவலர் கைது..!

wpengine

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

wpengine

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

wpengine

Leave a Comment