உள்நாட்டு செய்திகள்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்


மீள்குடியேற்றத்திற்கு பொறுத்தமில்லாத காணிகளில் குடியேற இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(23) இடம்பெற்ற அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிக மழையின் காரணமாகவே வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

எனினும் அனுமதியற்ற காணி நிரப்பும் நடவடிக்கைகள் வடிகால்களை நிரப்புதல் போன்ற செயற்பாடுகளே வெள்ளத்திற்கு  காரணிகளாக அமைகின்றன.

சில பிரதேசங்களில் நீர் காவிச் செல்லப்படும் வடிகால் ஓரங்களிலும் ஆற்றங்கரையோரங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டவிரோத குடியிருப்புகளில் மீள்குடியேற இடமளிக்கப்படமாட்டாது.

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சஜித்தை வீழ்த்த பல கோணங்களில் சதி – ரிஷாத்

wpengine

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் உறுதியாகவுள்ளோம் – அநுர…

wpengine

எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…

wpengine