உலக செய்திகள்

மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இங்கிலாந்தை மிரட்டும் இமோகென் புயல்



இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியை ஆட்கொண்டுள்ளது.

‘இமோகென்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 80 மைல் (சுமார் 130 கிலோமீட்டர்) வேகத்தில் கடலோர நகரங்களை பதம்பார்க்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, தெற்கு வேல்ஸ் மற்றும் தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ள நகரங்களில் வசிப்பவர்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்து மஞ்சள் அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புயலின் சீற்றத்தால் பேரலைகள் உருவாகலாம் என்பதால் இங்கிலாந்தின் வடக்கு கடலோர பிரதேசங்களான கார்ன்வால், டேவோன் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தெற்கு கலிபோர்னியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்காவில் 45,000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

wpengine

அகதிகளின் படகு கவிழ்ந்ததில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட அகதிகள் பலி…

wpengine